மதுரை சித்திரைப் பெருவிழா 2016 - ஒன்பதாம் திருநாள்

 

மதுரை சித்திரைப் பெருவிழா  2016 - ஒன்பதாம் திருநாள்

திக்கு விஜயம் - இந்திர விமான உலா
18.04.2016 சித்திரை 05 திங்கள் 

 

திருவிழா தத்துவமும் பலனும்:


ஒன்பதாம் நாள் திருவிழா இரவு அருள்மிகு மீனாட்சியம்மை தடாதகைப் பிராட்டியாக் மதுரையம்பதியில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வினைக் குறிக்கும் வகையில் அம்மனின் திக்கு விஜயம் நடைபெறும். அப்பொழுது அம்மன் அஷ்ட திக்குபாலர்களை எதிர்த்து வெற்றி பெற்று லீலை நடைபெறும். ஒன்பதாம் நாள் திருவிழா சகளம், நிஷ்களம்,சகளநிஷ்களம் என்னும் வடிவம் மூன்றும், சிருஷ்டி முதலிய முத்தொழில்களும், தன்மை முதலிய மூன்றிடத்து இருத்தலுமாகிய ஒன்பதும் இல்லை என்பதை குறிப்பதாகும்.

 

எழுந்தருளும் நேரம்: காலை 07.00 மணிக்கு

எழுந்தருளும் வீதிகள்: நான்கு மாசி வீதிகள்

வாகனம்: மரவர்ணச் சப்பரம்

எழுந்தருளும் மண்டபம்: கோவிலுக்குள் சிவகங்கைராஜா மண்டகப்படி

திருவீதிவுலா முடிவுற்று திருக்கோவிலுக்கு வந்து சேரும் நேரம்: நள்ளிரவு 09.30 மணிக்கு

 

எழுந்தருளும் நேரம்: மாலை 06.00 மணிக்கு

எழுந்தருளும் வீதிகள்: நான்கு மாசி வீதிகள்

வாகனம்: இந்திரவிமானம்

திருவீதிவுலா முடிவுற்று திருக்கோவிலுக்கு வந்து சேரும் நேரம்: அதிகாலை 01.00 மணிக்கு