மதுரை சித்திரைப் பெருவிழா 2016 - பத்தாம் திருநாள்

மதுரை சித்திரைப் பெருவிழா 2016 - பத்தாம் திருநாள் 

 திருக்கல்யாணம் - யானை - பூப்பல்லக்கு உலா
19.04.2016 சித்திரை 06 செவ்வாய்

 

திருவிழா தத்துவமும் பலனும்:

பத்தாம் நாள் திருக்கல்யாண திருவிழா மக்கள் புணர்வுறு போகம் மூழ்க இறைவன் புருடனும் பொண்ணுமாகித் திருமணம் கொண்டு ஆற்றுப்படுத்தலைக் குறிப்பதாகும். இறைவனும் இறைவியும் புரிந்து கொள்ளும் கல்யாணம் திருக்கல்யாணம் எனப்படும்.போகியாயிருந்து உயிர்களுக்குப் போகத்தைப் புரிகின்றான். இறைவன் போகவடிவில் வாழமற் போனால் உலகத்து உயிர்கள் அனைத்தும் போகியாய் வாழ இயலாது. ஆதலின், இறைவன் திருக்கல்யாணம் புரிவது நம் பொருட்டேயாகும். பாத்தாம் நாள் இரவு யானை வாகனத்தின் மீது இறைவன் ஏறி எழுந்த்தருளுகிறான். இது இலயக்கிரம சிருட்டிக் கோலமாகும். இலயக்கிரமம் என்பதற்கு ஒடுங்கும் முறை என்பது பொருள். உலகப்பொருள்கள் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்கி ஒரே பிண்டமான யானையின் உடம்புபோல் பருமனாய்க் கிடந்தது ஒடுங்குதலாகும். அதிலிருந்து திரும்பவும் தோன்றுவது இலயத்தின் பின் சிருட்டி தொடங்குவதை குறிக்கின்றது. யானையின் நான்கு பாதங்கள் பிண்டாகார உற்பவஜடத்வம், சுவாசசூக்குமம், வாஜிஜீவத்வம், பிராணாயாமம் இவைகளைக் குறிக்கின்றது. இவை யானையைப்போல ஆத்மஞானத்தில் தோன்றி, துதிக்கையை ஒத்த கஷிம்ணையில் நிலைநிற்கும். யானையின் மேல் வைக்கும் அம்பாரி முதலியன வெளித்தோற்ற அண்டாகாரமாகும். உற்சவ, சூக்கும், ஜீவ, மாயாஞானங்கள் ஆத்ம ஞானத்தில், அவை ஈசுவர சைதன்யத்தும். ஈசுவர சைதன்யம், பிரம சைதன்யத்திலும் இலயிக்கிறது என்பதைக் குறிக்கின்றது.

 

எழுந்தருளும் நேரம்: காலை 04.00 மணிக்கு

எழுந்தருளும் வீதிகள்: நான்கு சித்திரை வீதிகள்

வாகனம்: வெள்ளி சிம்மாசனம்  

எழுந்தருளும் மண்டபம்: கோவிலுக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் நாகப்பச் செட்டியார் கட்டளை மண்டகப்படி

 

எழுந்தருளும் நேரம்: இரவு 07.30 மணிக்கு

எழுந்தருளும் வீதிகள்: நான்கு மாசி வீதிகள்

வாகனம்: யானை - ஆனந்தராயர் பூப்பல்லக்கு

திருவீதிவுலா முடிவுற்று திருக்கோவிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 11.30 மணிக்கு