மதுரை சித்திரைப் பெருவிழா 2016 - பதினோறாம் திருநாள்

மதுரை சித்திரைப் பெருவிழா 2016 - பதினோறாம் திருநாள்

திருத்தேரோட்டம் - சப்தாவர்ணச்சப்பர உலா
20.04.2016 சித்திரை 07 புதன் 

திருவிழா தத்துவமும் பலனும்:

பதினோறாம் நாள் நடைபெறும் திருத்தேர் திருவிழா இறைவனின் சங்காரம் (மறைத்தல், அருளல்) குறித்து நடைபெறுவதாகும். மேலும் ஆன்மாக்களுக்கு உயர்வு நல்கிவருவதையும் குறிப்பதாகும். தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்குச் சமானம். விசுவவிராட் சொரூபமே எட்டு அடுக்குகளாகும். உச்சியிலிருக்கும் கும்பம் சோடசாந்தம்; அதற்கு அடுத்து கீழடுக்கு துவாதசாந்தம்; அதற்கடுத்தது மஸ்தக அதிஸ்தானம்; அதற்கடுத்தது மஸ்தக மத்தியஸ்தானம்; அதற்கடுத்தது மஸ்தக அந்தஸ்தனம்; அதற்கடுத்தது புருவமத்தியஸ்தானம்; நடுவில் தாங்கும் குத்துகால்கள் தத்துவக்கால்கள்; முன் மூன்று துறைகள் மூன்று கண்கள். பின்னவை, சிகையும் இட, வலக்காதுகளுமாகும். இறைவன் எழுந்தருளியிருக்கும் கேடய பீடம் முப்பாழ்; குதிரைகள் சூரிய, சந்திரகலைகள்;சாரதி அக்னிக்கலை இவை நாசியாகும்; அடுத்து கண்டஸ்தானம்; அதை அடுத்த அடுக்கு இருதய ஸ்தானம்; அதை அடுத்து அடுக்கு நாபி; அதற்க்கு அடுத்து அடுக்கு குண்டலி ஸ்தானம்; பத்துச் சக்கரங்களும் தசவாயுக்கள். இறைவன் இதற்ககுக்கர்த்தா தான் ஒருவனே என்றுணர்த்தி இவவாறமைந்த பிண்டத்துவ சரீரமாகிய இரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி,அசைவற்ற மனத்தை உந்தி, குண்டலியிருந்து நாபிக்கும். அதிலிருந்து கண்டத்திற்கும், அதிலிருந்து வாய்க்கும் ஏற்றி இலயபடுத்தி, முறையே இரதக்குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண்வழியாகவும் நடுவழியாகவும் மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவமத்திக்கும் ஏற்றி இலயப்பட்டு சும்மா இருந்தபடி இருக்கும் நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற இலயக்கிரமத்தைக் காட்டுகிறது. மேலும் தேர் திரிபுராதிகளைச் சிவன் சிரித்து எரித்து ஆன்ம கோடிகளைக் காப்பாற்றிய ஸ்திதிக் தொழிலுக்கும் அறிகுறியாகும்.

 

எழுந்தருளும் நேரம்: காலை 06.00 மணிக்கு
எழுந்தருளும் வீதிகள்: நான்கு மாசி வீதிகள்
வாகனம்: திருத்தேர்
எழுந்தருளும் மண்டபம்: கோவிலுக்குள் ம.முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியும் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியும்

எழுந்தருளும் நேரம்: இரவு 07.00 மணிக்கு
எழுந்தருளும் வீதிகள்: நான்கு மாசி வீதிகள்
வாகனம்: யானை - சப்தாவர்ணச்சப்பரம்
திருவீதிவுலா முடிவுற்று திருக்கோவிலுக்கு வந்து சேரும் நேரம்: இரவு 10.30 மணிக்கு