Madurai Chithirai Thiruvizha 2017 festival Live Telecast sponsored by...

சித்திரைப் பெருவிழா 2017 - ஏழாம் நாள் திருவிழா 4.5.2017 (Recorded)

மதுரை சித்திரைப் பெருவிழா 2017 - ஏழாம் நாள் திருவிழா - நந்திகேசுவரர், யாளி வாகன உலா - 4.05.2017 சித்திரை 21

எழுந்தருளும் நேரம்: இரவு 07.00 மணிக்கு
எழுந்தருளும் வீதிகள்: நான்கு மாசி வீதிகள்
வாகனம்: நந்திகேசுவரர்-யாளி

ஏழாம் நாள் திருவிழா எழுவகைப் பிறப்பு, கலையாதிகள் ஏழு, மாயாகுணம் ஏழு, என்னும் இவற்றைத் தவிர்த்தற் பொருட்டாகும். ஏழாம் நாள் காலையில் பிட்சாடனத் திருக்கோலத் திருவிழா நடைபெறும். தாருகாவனத்து ரிஷிகளும், ரிஷிபத்தினிகளும் ஆவண மலத்தால் தாங்கள் சுதந்திரர்களென எண்ணிக் கடவுளை மறந்தனர். அவர்கள் பரதந்திரர்களென உணர்த்துதற் பொருட்டு இறைவன் பிட்சாடன மூர்த்தியாய்ச் செல்ல. ரிஷிபத்தினிகள் அவரழகில் ஈடுபட்டனர். விஷ்ணு மோகினியாகச் செல்ல அவ்வழகில் ரிஷிகள் ஈடுபட்டனர். இவ்விரண்டு செயல்களாலும் ரிஷிகளும், அவர் பத்தினிமார்களும் பரதந்திரர்களேயென அவர்களை உணரச் செய்து, பரமன் மறைந்தருளினான். பராக்ரமக் கோலமே பிட்சாடனக் கோலமாகும். ஏழாம் நாள் இரவில் அதிகாரநந்தி வாகனம். இது விருத்திக்கிரம சங்காரக் கோலம் என்பர். அதிகார நந்தி மான், மழு, சதுர்ப்புஜம், முக்கண் முதலிய குறிகளோடு சாரூப்பிய பதவியைப் பெற்றவர். இவர் விஞ்ஞான கலர் எனும் ஆன்மாக்களுள் சிறந்தவர் ஆவார். கைலையில் சிவசந்நிதிதானத்தில் அதிகாரம் செலுத்துபவர். ஆதலால் அதிகாரநந்தி எனப் பெயர் பெற்றார்.

Watch the video
Videos

Read More
( 3 / 1 votes)